மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

பைக் ரேஸ் : வீடியோவில் மன்னிப்பு கேட்ட இளைஞர்!

பைக் ரேஸ் : வீடியோவில் மன்னிப்பு கேட்ட இளைஞர்!

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று தீப்பொறி பறக்கச் சாலை தடுப்புகளை இழுத்துச் சென்ற இளைஞர் தமது தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலை, கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்று அடாவடி செய்த பைக் ரேஸ்காரர்களை தனிப்படை அமைத்து காவல்துறை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்று அட்டகாசம் செய்ததோடு மட்டுமல்லாமல், தாங்கள் செய்த அடாவடித்தனத்தைப் பெருமையாக எண்ணி அந்தக் கும்பலில் ஒருவரான பீட்டர் அவரது முகநூலில் விவரித்து வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ காவல்துறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறை உதவியோடு, முகநூலில் வீடியோ பதிவு வெளியிட்ட பீட்டர் என்ற அந்த இளைஞனைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்தக் கும்பலைச் சேர்ந்த தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் தனிப்படை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோவை வெளியிட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த பீட்டர் என்ற கார்த்திக், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பரத், பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த முத்துவேல், ஜவஹர் பாரூக் என்ற கல்லூரி மாணவன் ஆகிய 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அதிவேகமாகச் செல்லுதல், பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் பேரிகார்டை பொறிபறக்க இழுத்துச் சென்று தாம் செய்த செயலை விளக்கிய பீட்டர், "தாம் கெத்து என நினைத்துச் செய்தது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துவிட்டதாகவும், இனி இதுபோன்று செய்ய மாட்டேன்" என்றும் கைதான பின் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 7 ஜன 2018