பியூட்டி ப்ரியா

மேனி அழகுக்கு க்ரீம்களின் பங்களிப்பைவிட பழங்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அந்த அளவுக்கு சத்துகள் நிறைந்த பழங்களை சாலட் போன்று செய்து சாப்பிடலாம். மேனி அழகோடு ஆரோக்கியத்தையும் காக்கலாம். இன்றைய ஸ்பெஷல் ஃப்ரூட் பச்சடி செய்வோமா?
பழங்கள் (கலவையாக) - 2 கப்
வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - அரை டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - கால் கப்
உலர்ந்த திராட்சை - கால் கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பழங்களுடன் வெல்லம், தேன், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய் சேர்த்து கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
சுவையான ஃபுரூட் பச்சடி தயார். இதை விருப்பமான உணவோடு பரிமாறலாம்.
பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஃபைபர் அதிகம் உள்ளது. மேலும், பழங்கள் அதிக ஆரோக்கியம் கொண்டது. இதயநோய், நீரிழிவு, சில புற்றுநோய்களைக் குறைக்கும்.
ஜாதிக்காயில் புரதம், அமினோ அமிலம், வைட்டமின், தாதுகள் உள்ளன. அவை மாதவிடாய் பிரச்னைகள், அஜீரணம், ரத்த அழுத்தம், இருமல், தசை மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளைக் குறைக்கும். மேலும் கிருமி நாசினிகள், நுண்ணுயிர்க்கொல்லி போன்ற மருத்துவக் குணங்கள் கொண்டது.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால் உடலானது அழுக்கின்றி இருக்கும்.
சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதேபோல் அந்த ஆப்பிளை மசித்து அதில் சிறிது தேன் சேர்த்து, அதை முகத்துக்குத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து கழுவ வேண்டும். இந்தக் கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.
திராட்சையை அடிக்கடி சேர்த்துக்கொள்ள எண்ணெய்த்தன்மை கொண்ட பருக்களைச் சரிசெய்யும். தினமும் திராட்சை சாறு பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.