மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சண்டே ஸ்பெஷல்: கண்ணை கவரும் வைர நகைகள்!

சண்டே ஸ்பெஷல்: கண்ணை கவரும் வைர நகைகள்!

கைவேலை செய்யப்பட்ட வைர நெக்லஸ் செட்

நுணுக்கமாக வைரக்கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்ட அழகான தங்க ஆரம். சின்னச் சின்ன மயில் டிசைனால் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஆரத்தில் இதன் நுணுக்கமான கைவேலைப்பாடு தான் ஸ்பெஷல். இரு பக்கமும் மயில் மேலே யாளி வடிவத்துடன் இருக்கும் மகாலஷ்மியின் உருவம் டாலராக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வடிவத்தில் கிரீடத்தில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பது பார்க்க அழகாக இருக்கிறது.

எமரால்டு ஸ்டோன் வைர நெக்லஸ் செட்

​எமரால்டு கற்களும், வைரக் கற்களும் சரியான இடைவெளியில் பதிக்கப்பட்ட நெக்லஸ் செட். ரொம்பவும் புதுமையான வகையில் வந்திருக்கும் இந்தச் செட்டில் பல சுற்றுகள் கொண்ட வட்ட வடிவில் இருக்கும் வைரக்கல் டாலர் ஜொலிக்கிறது. நெக்லஸின் அடிப்பாகத்தில் தங்க முத்துகள் கோர்க்கப்பட்டுள்ளதைப் பார்க்க கொள்ளை அழகு. இதன் ஜோடியான கம்மலிலும்கூட வைரக்கல்லும் எமரால்டும் பதிக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாலரில் முத்துகள் இருப்பது உண்டு. அதற்கு இணையாகக் கம்மலும் அழகாகப் பொருந்தி உள்ளது.

பீகாக் டாலர் மாடல் முத்தாரம் நெக்லஸ் செட்

பல வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட, மயில் டாலர் பதித்த ஃபேன்ஸி நெக்லஸ். டாலரில்முத்துகளும் கோர்க்கப்பட்டுள்ளன. நெக்லஸின் மேல் வரிசையில் முத்துகள், கீழ் வரிசையில் அன்னப்பறவைகள் உள்ளது போல் செய்யப்பட்டுள்ளது அசர அடிக்கும் அழகு. பெரிய முத்து இணைக்கப்பட்ட கம்மல் ஜிமிக்கி இதன் ஜோடி.

எக்ஸ்க்ளூசிவ் ஃபேன்ஸி நெக்லஸ்

சிவப்பும் வெள்ளையுமாகக் கற்கள் பதித்த பூ டிசைன், அதற்குக் கீழ் தானியம் வடிவில் ஒரு டிசைன், அடிப்பாகத்தில் சிவப்புக்கற்கள் பதித்துச் செய்யப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் ஃபேன்ஸி நெக்லஸ். அதே சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும் பதித்த ஓவல் வடிவ டாலர் சேர்க்கப்பட்டுள்ளது போல் பல வடிவங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. சாதாரண நெக்லஸ் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் இதன் வடிவம்தான் அழகுக்கு மேலும் அழகு கூட்டும் விதமாக இருக்கிறது.

மாங்காய் மாலை ஆரம்

எமரால்டு மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்டுச் செய்யப்பட்ட அட்டகாசமான நெக்லஸ் செட்டுகள் இப்போது கிடைக்கிறது. மேலே தங்க முத்துகள், நடுவில் கற்கள் பதித்த பூ வேலைப்பாடு, அடியில் சிவப்புக்கல் பதித்த மாங்காய் வரிசை பார்க்க அழகாகவும் கண்ணை கவரும் வகையிலும் இருக்கிறது. ஆரத்தின்நடுவில் இருபக்கமும் முகப்பு இத்துடன் முத்துகள் கோர்க்கப்பட்ட டாலர் பார்ப்பவர்களை கவரும். இதன் நுணுக்கமான வேலைப்பாடுகள் அருமையாக உள்ளது

வைரக்கல் நெக்லஸ் செட்

​சின்னச் சின்ன வைரக்கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ். நடுவில் முத்துகள் கோர்த்த பூ டிசைன். பக்கவாட்டில் இலைகள் போன்று அழகாகவடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இன்னும் கூட புதுமையான வகையில் பல வடிவங்களில் அழகிய வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும் இவை பின்பக்கம் இருக்கும் அந்தக் கழுத்துப்பட்டை மிக அழகாக உருவாக்கப்படுகிறது. அதே போன்று அழகிய வேலைப்பாடு உள்ள வைர வளையல், வைரக்கம்மல் இணைந்து அணையும் போது நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதமாக ஆடம்பரமாக அமைந்து விடுகிறது.

இத்தாலியன் ஷெர்கான் நெக்லஸ் செட்

ஷெர்கான் கற்கள் பதிக்கப்பட்ட இத்தாலியன் டைப் நெக்லஸ் இது. இதன் அல்ட்ரா சிட்டி டிசைன் கலக்கல். மெல்லிய செயின் போன்று இருப்பதால் இளம் பெண்களை கட்டாயம் கவரும். பார்ட்டிகளுக்கு போட்டுச் செல்ல ஏற்ற வகையில் இருப்பது இதன் சிறப்பு. அதே போல்இ பெரிய வடிவிலான நகைகளும் இதில் அடங்கும். கம்மலும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பது மேலும் இந்த நெக்லஸிற்கு அழகூட்டுகிறது.

ரோடியம் நெக்லஸ் செட்

இம்போர்டட் டிசைன் ஸ்பெஷல் கலெக்‌ஷன் நெக்லஸ் செட் இது. பார்ட்டிகளுக்கு போட்டுச் செல்ல உகந்த இந்த நெக்லஸின் ஸ்பெஷலே ரோடியம் கோட்டிங்தான்.மாவிலைத் தோரணம் போல் ஓவல்ஷேப்பில் வரிசையாக அமைந்துள்ள இந்த டிசைனர் ஃபேன்ஸி நெக்லஸின் கம்மலும் ரோடியம் கோட்டிங் செய்யப்பட்டதுதான். மேலும் டாலரில்லாமல் ஹைலுக்குடன் இருக்கும் டிசைனாகவும் இது இருக்கிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018