மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது: அகிலேஷ்

லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது: அகிலேஷ்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் குறித்து லாலு பிரசாத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தனது கொள்கைகளுடன் உடன்படாதவர்களைப் பழிதீர்க்கும் வகையில் நடந்து கொள்வதாகவும், ஆனால் பாஜகவை பின் பற்றுவதைக் காட்டிலும் சமூக நல்லிணக்கத்திற்காக உயிரை விடுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” என்று பதிவிடப்பட்டது. இதேபோல், லாலுவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், லாலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாக உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, “ லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது” என அவர் பதிலளித்தார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 ஜன 2018