டெம்ப்ரவரி அரசாங்கத்தின் டெம்ப்ரவரி டிரைவர் -அப்டேட் குமாரு

சட்டமன்றத்தை லைவ் பண்ணப்போறாங்கன்னு கேள்விப்பட்டதுல இருந்து காமெடி சேனல் நடத்துறவங்களுக்கெல்லாம் வதக்கு வதக்குன்னு இருந்துக்கிட்டிருக்கும். இதுல சிக்கப்போறவங்களே, சாதிக்காரன், சங்கத்து ஆள்னு பலத்தைக்காட்டி கெலிச்சவங்க தான். உள்ள ஏதாவது பேசிட்டு வெளியவந்து, அடுத்து நமக்குதான் குமாரு கவலைப்படாதன்னு உட்ட ரீலெல்லாம் அந்து போகும். இதைவிட ஹாட் மேட்டர் என்னன்னா, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை உடைக்க, தற்காலிக டிரைவரை அரசு நியமிச்சிருக்கு. இந்த தமிழ்நாட்டு வண்டியை ஓட்டுற முதல்வரே தற்காலிக டிரைவர் தான். சட்டமன்றம் ஸ்டார்ட் ஆனதுக்கப்பறம்தான் அவர் பர்மனண்டா, டெம்ப்ரவரியான்னு தெரியும். அப்ப இருக்கு கச்சேரி. நீங்க அப்டேட்டைப் பாருங்க. நான் போய் பஸ் ஓட்டிட்டு வர்றேன். இவனுக்கு எப்படி வண்டி ஓட்டத்தெரியும்னு பாக்குறீங்களா? பஸ் ஓட்ட லைசன்ஸ் இருந்தாபோதும்ங்க, ஓட்டத்தெரியணும்னு அவசியம் இல்லை. வர்ட்டா...
@ragulsundaram
பொங்குவதற்கு சோறு தரும் உழவர்க்கு
தொங்குவதற்கு கயிறு தரும் உலகம்.
@senthilcp
இந்த நாய்க்கும் எனக்கும் எதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கு.... 3 வருசமா எங்க தெருவுல சுத்துது
3×365=1095 நாள்ல ஒரு நாளாவது ஒரு பிஸ்கெட்டாவது போட்டிருப்பீங்களா?
இல்ல
அதான் சுத்துது..
@mufthimohamed1
அலாரம் வைத்துவிட்டு உறங்குவதும், அலாரம் அடித்தவுடன், அலாரத்தை உறங்க வைப்பதுமே பலருடைய வழக்கமாகிவிட்டது..
@Kozhiyaar
பீகாரில் இன்ஜினியருக்கு கட்டாய திருமணம்- செய்தி!!
தமிழக இன்ஜினியர்கள் மைண்ட் வாய்ஸ்- அந்த கொடுப்பினை நமக்கு இல்லாம போச்சே!!!
@yugarajesh2
இளைஞர்கள் மத்தியில் நற்பண்புகள் வளர்வதற்கு சாரணர் படை அவசியம்-வெங்கய்ய நாயுடு
அதை நாங்க சாரணர் தேர்தலில் எச்.ராஜா தோற்றுப்போனப்பவே புரிஞ்சுக்கிட்டோம்..?
@vishnut87
அரசுத்துறையில் யார் ஊதிய உயர்வுக்கு போராடினாலும் பக்குன்னு ஆகிடுது......
டாஸ்மாக் சரக்குதான் விலை ஏறுது.....
சண்டேல பொலம்ப விட்றீங்களேய்யா!
@ajay_aswa
இவனுங்க வேற சம்பளம் அதிகம் கேட்டு ஸ்டிரைக் பண்றானுங்க
அத ஈடுகட்ட இந்த மானங்கெட்ட அரசு
நம்ப மடியிலதான் கைய வைப்பானுங்க
என்று பொலம்பி கொண்டே நகர்ந்தார்
அந்த ஏழை குடிகார பெரியவர்
@CreativeTwitz
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி இருந்தாலும் வேட்டி சேலை ஏழைகளுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றன - ஜெயக்குமார்
என்னது வேட்டியா அப்ப அது இட்லி துணி இல்லையா...
@imparattai
எப்போதும் தலைகுனிந்தே இருந்தயேயானால் மண்ணுக்கு விரைவில் செல்வாய்.
தலைநிமிர்ந்து செயல்பட்டால் விரைவில் விண்ணை தொடும் சாதனை நிகழ்த்துவாய்.
@mekalapugazh
இந்திய அளவில் தமிழகம்தான் கல்வியில் முதலிடம்..
இதில் பலருக்கும் வருத்தம் இது திராவிட ஆட்சியிலென்பதும்..
பலன் பெற்றவர் பிற்படுத்தப்பட்டவரும் தாழ்த்தப்பட்டவரும்..
என்பதே.
@senthilcp
டியர், அன்பு என்பது கட்டுப்படுத்துவதா? கட்டுப்படுவதா?
2ம் இல்லை, இப்படிக்கட்டிப்பிடிப்பதே உண்மை அன்பு!!!
@Ajaisundar99
இப்பொழுது எல்லாம்
'பணி'ச் சுமையை விட
'பனி' சுமை தான் அதிகமாக உள்ளது....
@Kozhiyaar
அதென்ன டா அமெரிக்காவில இருக்கிறவன் பூரா பனியில நிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்து போடுறீங்க!!
நாங்க வெயில் காலத்தில் வேர்வையோடு நிக்கிற மாதிரி எப்பயாவது ஃபோட்டோ போடுறோமா!?
@Vettaian*
அதிக மதிப்பெண் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது ; குறைந்த மதிப்பெண் சில முதலாளிகளை உருவாக்குகிறது.
@mufthimohamed1
போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர மனம் உள்ளது; பணம் இல்லை - செங்கோட்டையன்
கேளுங்கய்யா கேளுங்க யார்ட்ட கேக்குறிங்க..
@selva_twitz
பணக்காரன் காசை பதுக்குறான்!
ஏழை காசை பிதுக்குறான்...
@MJ_twets
புறம் பேசுவதற்கு நேர்மை எனும் தகுதி அவசியம். ஆனால், நேர்மையானவர்கள் யாவரும் புறம் பேசுவதில்லை.!
@manipmp
ஊரில் இல்லாத போது அம்மாவின் அன்பை உணர முடியும்
உலகில் இல்லாதபோது தான்
அப்பாவின் அன்பை உணர முடியும்.
@senthilcp
தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு யாரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை-அன்புமணி
அரசியல் ஆசை இல்லாத ஒரே "முன்னணி ஹீரோங்கறதால பாராட்றீங்களா?
வாசுகி பாஸ்கர்
காட்டுல வாழுற யானையை இவனுங்களே கோவிலுக்கு கூட்டிப்போய் நாமத்தை போட்டு பிச்சை எடுக்க வைப்பானுங்க. அப்புறம் இவனுங்களே அதுங்களை காட்டுக்கு முகாம் ங்கிற பேர்ல டூர் கூட்டிட்டு போவானுங்க!
-லாக் ஆஃப்