மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

உணவு கலப்படம் : புகாரளிக்க முன்வர வேண்டும்!

உணவு கலப்படம் : புகாரளிக்க முன்வர வேண்டும்!

அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்களில் கலப்படம் பரவி காணப்படுகிற நேரத்தில், அதை சமாளிப்பதற்கு சாமானிய மனிதர்களால் என்ன செய்ய முடியும் என நினைக்கக் கூடாது. நம்மால் முடிந்தவரை அந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அதனால், இதுகுறித்து மக்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஒவ்வொருவரும் சந்தேகத்துக்குரிய உணவுப் பொருட்களை சோதனை செய்ய தாமாக முன்வர வேண்டும் என அரசு விரும்புகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அது தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்து எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை. அதனால், இந்தச் சட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அரசு கருதுகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ், சாதாரண குடிமகன் சந்தேகத்திற்கிடமான உணவுப் பொருட்களை FSSAI ஆய்வகங்களில் பரிசோதிக்கலாம். சோதனையில், ஏதேனும் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால், பரிசோதனையின் செலவுத் தொகை மனுதாரருக்கே திரும்பி கொடுக்கப்படும். உணவு வகையைப் பொறுத்து இதற்கான செலவு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை ஆகும்.

சமீபத்திய அறிக்கையில், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு புகாரும் பெறவில்லை, எனவே, இந்த சட்டம் குறித்து மக்களிடையே விளம்பரம் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.இந்த வசதி அனைவருக்கும் கிடைக்கின்றபோது, இது ஒரு நேரத்தை விரயமாக்கும் செயல் என்பதால் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018