மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

நறுமணப் பொருள்: ஏற்றம் தருமா 2018?

நறுமணப் பொருள்: ஏற்றம் தருமா 2018?

2018ஆம் ஆண்டு நறுமணப் பொருள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்ற ஆண்டாகச் சிறிய முன்னேற்றம் இருக்குமென்று விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் சட்ட விரோதமாகவும், அதிகளவிலான இறக்குமதியாலும் உள்நாட்டு நறுமணப் பொருள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். மிளகைப் பொறுத்தவரையில் உள்நாட்டுத் தேவை 60,000 டன்னாக உள்ளது. நடப்பாண்டில் கேரளா மற்றும் கர்நாடக விவசாயிகள் 58,000 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த ஆண்டிலும் மிளகு உற்பத்தித் துறையில் பெரிய மாற்றமிருக்காது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இருப்பினும் இலங்கை மற்றும் வியட்நாமிலிருந்து அதிகளவிலான இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய அரசு கூறியுள்ளது.

சிறிய ஏலக்காயைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் தோராய விலை ரூ.950 ஆகச் சரிந்தது. இருப்பினும் இந்த ஆண்டில் சிறிய ஏலக்காய்க்கான தேவை அதிகரித்து விலைச் சரிவு சீராகும் என்று சி.பி.எம்.சி. பொது மேலாளர் பி.சி.போன்னோஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார். 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரையிலான காலத்தில் 20,000 டன் முதல் 25,000 டன் வரை சிறிய ஏலக்காய் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018