மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

என்ன பேசினோம்? முதல்வர் விளக்கம்!

என்ன பேசினோம்? முதல்வர் விளக்கம்!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக ஸ்டாலினிடம் தான் பேசியதை தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தமளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(ஜனவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மு.க ஸ்டாலின் உடனான தொலைபேசி உரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உடனே வேலை நிறுத்தத்தை கை விட்டு, பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன்.

ஆனால், தி.மு.க. தனது அறிக்கையில், முதல்வரிடம் தொலை பேசியில் எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர் பிரச்சினையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக் கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என இன்று காலையில் வெளிவந்த செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்தேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் .

முன்னதாக, திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று ஜனவரி 6 சந்தித்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வரச் சொல்லி கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018