மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ஜுங்கா: பெயரச் சொல்லு அலறுவான்!

ஜுங்கா: பெயரச் சொல்லு அலறுவான்!

விஜய் சேதுபதி, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் ஜுங்கா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மலேசியா நடைபெற்று வரும் நட்சத்திர விழாவில் கலந்து கொண்டு வரும் விஜய் சேதுபதி தனது படங்களின் புரொமோஷன் வேலைகளையும் முடித்து விட்டார். ஜுங்கா, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய இரு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இரு படங்களின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வை முடித்திருக்கிறார்.

இந்த இரு படங்களில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஜுங்கா படத்தின் டீசரைத்தான். ஏனெனில் பாரிஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வெளியான டீசர் வெளியாகி 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

இந்த டீசரில் “பெயரச் சொல்லு அலறுவான்” என விஜய் சேதுபதி மாஸாக பேச, அதற்கு யோகி பாபு “உங்க பெயர் என்னண்ணே..” என்று கேட்பதோடு, ஜுங்கா என்கிற விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயரை திரும்பத் திரும்ப யோகி பாபு சொல்லிப் பார்ப்பது நகைச்சுவைத் தன்மையாக இருக்கிறது.

`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் காமெடி தாதாவாக விஜய் சேதுபதியை ரசிக்க வைத்த இயக்குநர் கோகுல் இந்தப் படத்திலும் அதே பாணியை கையிலெடுத்து ரசிக்க வைக்க இருக்கிறார் என டீசரைப் பார்க்கையில் தெரிகிறது.

ஜுங்கா டீசர்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 7 ஜன 2018