மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தொடரும் திருநாவுக்கரசர்

தொடரும் திருநாவுக்கரசர்

அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். அதையடுத்து காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. அதுபோலவே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜனார்த்தன திவேதி வெளியிட்ட அறிக்கையில், "அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை அந்ததந்த மாநிலத் தலைவர்கள் , தங்கள் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவியில் திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டதாரிகள் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்வு இன்று( ஜனவரி 7) தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைவராக தொடர்வதையொட்டி திருநாவுக்கரசருக்கு ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையைத் தீர்க்க முதல்வரும், போக்குவரத்து துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் பேசக்கூடாது, பேச்சுவார்த்தையின் மூலமாகத்தான் பிரச்னைக்கு உரிய தீர்வுகாண முடியும்" என்றார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018