மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

கேரள அமைச்சர்: மருத்துவமனை ரசீதில் மோசடி!

கேரள அமைச்சர்: மருத்துவமனை ரசீதில் மோசடி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகப் போலி ஆவணங்களைக் கொடுத்து அரசிடம் இருந்து மோசடியாக பணம் பெற்றதால் கேரள பெண் அமைச்சரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள கே.கே.சைலஜா, சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பெற்றதற்காக ரூ.3,90,250-க்கான ரசீதுகளை அரசிடம் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆனால் மருத்துவமனை ரசீதுகளில் மோசடி செய்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுரேந்திரன், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் செயலராக இருந்த ஷாஜகான் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் சைலஜாவும், சில மருத்துவர்களும் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து ரசீதுகளை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு சைலஜா இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் மருத்துவச் செலவை பெறுவது தொடர்பான கேரள சட்டப் பேரவை உறுப்பினர்கள் (மருத்துவ வசதிகள்) விதிகள், 1994இன்படி இது விதிமீறலாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சைலஜா செய்தியாளர்களிடம் கூறியது: “மருத்துவ சிகிச்சைக்காக அரசிடம் இருந்து பணம் பெற்றதில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் செலவு செய்வதற்கு என்ன பணம் பெற முடியுமோ அதை மட்டுமே அரசிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்து நான் பெற்றேன்” என்றார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 ஜன 2018