மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சென்னை அணிக்கு திரும்பிய ஹஸ்ஸி

சென்னை அணிக்கு திரும்பிய ஹஸ்ஸி

சென்னை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.இந்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதியில் இந்த ஐ.பி.எல் தொடரிற்கான ஏலம் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் விளையாட உள்ளனர்.

ஏற்கனவே மஹேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்திருந்த சென்னை அணி மற்ற வீரர்களை ஏலத்தில் பெறவேண்டும். இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை நியமனம் செய்துள்ளது.இதுகுறித்து ஹஸ்ஸி கூறுகையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியின் வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கி வெற்றிபெற செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் சென்னை அணிக்காக விளையாடிய நினைவுகள் இன்னும் என்னுடன் உள்ளது. என்னைப் பொறுத்த வரை பல சிறந்த நண்பர்கள் சென்னை அணியில் உள்ளனர். சென்னை அணியின் புதிய தலைமுறை வீரர்களுக்கு பயிற்சி வழங்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா (3699) மற்றும் தோனியை (2987) தொடர்ந்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் மைக் ஹஸ்ஸி 1768 ரன்களுடன் உள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018