ஆதார்: பத்திரிக்கையாளர் மீது வழக்கு!

ஆதாரின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை குறித்து கேள்வியெழுப்பி செய்தி வெளியிட்டதற்காக தி ட்ரிபியூன் பத்திரிகை மீதும், செய்தியளித்த நிருபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெறும் 500 ரூபாய் செலவில், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இவை பெறப்பட்டுள்ளதாகவும் தி ட்ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. 500 ரூபாய் பணம் செலுத்தப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு கேட்வே ஆக்சஸ், லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அளிக்கப்பட்டதாகவும் அதன் மூலமாகவே ஆதார் தகவல்களை அணுக முடிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றையும் வெளியிட்டது.
ஆனால் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் ஒருவரின் பயோமெட்ரிக் இல்லாமல் அவர்களின் தகவல்களை யாராலும் பயன்படுத்த முடியாது என்று விளக்கம் அளித்தது.