மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ஈரோட்டில் திமுக மாநாடு!

ஈரோட்டில் திமுக மாநாடு!

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 8) கூடவுள்ளது. முதன்முறையாக ஆளுநர் பன்வாரிலால் சட்டமன்றத்தில் உரையாற்றவுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் 120 பேர் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (ஜனவரி 7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் அதற்கேற்றார்போல களப்பணிகள் ஆற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் 2ஜி வழக்கு பொய் வழக்கு என்று நிரூபித்து வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாடு நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் கடந்த 4ஆம் தேதி வெளியான டிஜிட்டல் திண்ணைபகுதியில் திமுக சார்பில் ஈரோட்டில் பிரமாண்ட மாநாடு நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “தமிழக அரசு கோரிய ஓகி புயல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். முத்தலாக் சட்ட மசோதா குறித்த இஸ்லாமியர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசின் கடன்சுமை அதிகரித்து வருவதால், நிதிநிலைமையைச் சரி செய்ய வேண்டும். நிபுணர் குழுவை அமைத்து நிதிநிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவை தொகையை வழங்க வேண்டும்” என கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018