மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

பயணிகளுக்கு இழப்பீடு கோரி வழக்கு!

பயணிகளுக்கு இழப்பீடு கோரி வழக்கு!

வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பயணிகளை நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின்போது பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரியும் இழப்பீட்டைப் பெற்றுத்தரக் கோரியும் வழக்கறிஞர் பிரீத்தா என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

“போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டது தவறு. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. முறையாகப் பயணச்சீட்டு எடுத்தும் உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்காமல் நடுவழியில் இறக்கிவிட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீட்டை, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பெற்றுத் தர தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018