மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தொடரும் போராட்டம்: திணறும் மக்கள்!

தொடரும் போராட்டம்: திணறும் மக்கள்!

தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கப் பணியாளர்கள் நான்காவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்றுடன் போராட்டம் நான்காம் நாளை எட்டியுள்ளது.

பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 30 சதவிகிதப் பேருந்துகளும், திருச்சியில் 35 சதவிகிதப் பேருந்துகளும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்று ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இன்று பணிக்குத் திரும்பவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தும் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதனால் அரசு தேர்வுகளுக்குச் செல்வோர், வார இறுதி நாள்களில் சொந்த ஊர் செல்பவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வார நாள்களைப் போல மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் இயக்கப்படாததால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் அலைமோதுகிறது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் 8ஆம் தேதி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018