மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

போலியை விரும்பாத வித்யா பாலன்

போலியை விரும்பாத வித்யா பாலன்

‘போலியான முக வசீகரத்தை நான் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘தி டர்ட்டி பிக்சர்’ இந்தி படத்தில் நடித்தவர் வித்யா பாலன். இந்தப் படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றியடைந்தது. இதையடுத்து நடிகை வித்யா பாலன் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்ட நிலையில் தொடர்ந்து படங்களிலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் பிங்க்வில்லா என்ற இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆரம்ப காலத்தில் ‘பரிணீதா’ படத்தில் நடிக்க வந்தபோது என்னை அப்படத் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, மூக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு தோற்றத்தை அழகாக்கிக் கொள்ளுமாறு கூறினார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் மூக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ளும்படியும் அதற்கு ஆகும் செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார் வினோத் சோப்ரா. அதைக்கேட்ட நான் பயமும், அதிர்ச்சியும் அடைந்தேன். மூக்கு அறுவைசிகிச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதுபற்றி பட இயக்குநர் பிரதீப் சங்கரிடமும் தெரிவித்தேன். கடைசி வரை ஆபரேஷனுக்கு நான் ஒப்புக்கொள்ளவே இல்லை” என்று கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018