மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

இந்தியாவின் தனிநபர் வருமானம் எவ்வளவு?

இந்தியாவின் தனிநபர் வருமானம் எவ்வளவு?

நடப்பு 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 8.3 சதவிகித உயர்வுடன் ரூ.1,11,782 ஆக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிப்பதற்கான நாட்டின் சராசரி தனிநபர் வருவாய் இந்த ஆண்டில் குறைந்தபட்ச வளர்ச்சியையே பதிவு செய்யும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி, 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் 8.3 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.1,11,782 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருவாய் 9.7 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.1,03,219 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நான்காண்டு சரிவுடன் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு வளர்ச்சியில் பின்னடைவைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகிதமாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 8 சதவிகிதமாகவும் இருந்தது. 2014ஆம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் தனிநபர் வருவாய் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018