மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

மனம் உள்ளது: பணம் இல்லை!

மனம் உள்ளது: பணம் இல்லை!

‘போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பதற்கு அரசுக்கு மனம் உள்ளது. ஆனால், கொடுப்பதற்குப் போதிய நிதியில்லை’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் நான்காவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆனால், தமிழகப் போக்குவரத்துத் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 66.49 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்று கரூரில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பாவிட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். நேற்று மாலை பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்த நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் வருகிற ஜனவரி 8ஆம் தேதியன்று அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கங்களை இணைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 7 ஜன 2018