மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சல்மானுக்குக் கொலை மிரட்டல்!

சல்மானுக்குக் கொலை மிரட்டல்!

ராஜஸ்தான் தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் தாதாவான லாரன்ஸ் வர்த்தகர்களைப் பயமுறுத்தி மிரட்டி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்டு இருந்தார். இதுகுறித்து அவர், “போலீஸ் தன்னை பொய்யான வழக்கில் கைது செய்து வந்துள்ளார்கள். எனக்கு எதிராக ஒரு சாட்சியும் வரவில்லை. அவர்கள் என்னிடம் பெரிய குற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். என்னால் சல்மான் கானைக் கொல்ல முடியும். அதற்குப்பின், எங்களுடைய உண்மையான அடையாளம் என்னவென்று அவருக்குத் தெரியவரும்” என்று பிஷ்ணோய், ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு நேற்று (ஜனவரி 6) அழைத்துச் செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் 1998ஆம் ஆண்டு சல்மான் கான் உட்பட சில துணை நடிகர்கள் சேர்ந்து, மானை வேட்டையாடிக் கொன்றனர். இது தொடர்பான வழக்கில் பிஷ்ணோயின் சமூகம் அன்றிலிருந்து இன்று வரை சல்மான் கானை வில்லனாகப் பார்ப்பதாகவும், ஆனால், சல்மான் கானை கொல்வேன் என்று சொல்லி ஒரு பரபரப்பை கிளப்பிவிடத் தான் பிஷ்ணோய் அவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று ஒருபக்கம் பேச்சு எழுந்துள்ளது. கொலை, ஹை-ஜேக், ஸ்னேச்சிங், மிரட்டல் போன்ற 20 வழக்குகளில் பிஷ்ணோய் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018