மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

டிஜிபி மாநாட்டில் மோடி

டிஜிபி மாநாட்டில் மோடி

மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் மாநிலங்களின் டிஜிபி, ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் வருடாந்திர மாநாடு நேற்று (ஜனவரி 6) தொடங்கியது. இன்றைய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி குவாலியர் வந்தடைந்தார்.

அனைத்து மாநிலக் காவல் துறைத் தலைவர்களின் வருடாந்திர மாநாடு டிசம்பர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மும்முரமாக இருந்ததால் டிசம்பரில் மாநாடு நடைபெறாமல் தள்ளிப்போனது. அதன்படி, 2018 ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தெகன்பூரில் மாநாடு நேற்று (ஜனவரி 6) வருடாந்திர மாநாடு தொடங்கியது. இதில் 200க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மதம் மாறி திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. கேரளப் பெண் ஹாதியாவின் திருமணம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாகவே கலப்பு திருமணங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து தொடர்பான மரணங்கள், மாநிலங்களுக்கு இடையேயான காவல் துறையினரின் ஒருங்கிணைப்பு, சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. பொதுவாக இந்த மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கவுஹாத்தி, குஜராத், ஐதராபாத் தற்போது குவாலியர் என்று பிற இடங்களிலேயே நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018