மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

நியூட்ரினோவுக்குச் சட்டவிரோதமாக அனுமதி?

நியூட்ரினோவுக்குச் சட்டவிரோதமாக அனுமதி?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், சுற்றுச்சூழல் சட்டங்களை புறந்தள்ளி நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய அரசும் தயாராகி வருவதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது பூவுலகின் நண்பர்களின் அமைப்பு.

தேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் அணுசக்தி துறை அனுமதி வாங்கியிருந்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், கடந்த மாதம் பிரதமர் தலைமையில் அணுசக்தி துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, இந்தியாவின் தலைமைச் செயலரை பொறுப்பாளராக நியமித்திருப்பதாகவும், இதைத் தொடர்ந்து நடைபெற்ற மத்திய அரசு துறை செயலர்களின் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தைச் சிறப்பு திட்டமாகக் கருதி அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இவ்வாறு செய்வது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று, இந்த விவகாரம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. “சட்டத்தை மதித்து கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசின் துறையே சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி அளிக்க முயற்சிப்பது நிச்சயம் தவறான முன்னுதாரணமாகும்” என்று இதில் கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018