மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சரிவை நோக்கிப் பருப்பு இறக்குமதி!

சரிவை நோக்கிப் பருப்பு இறக்குமதி!

இந்தியாவின் பருப்பு உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பின் அளவு படிப்படியாகக் குறைந்துவருகிறது.

இந்தியா 2016-17ஆம் நிதியாண்டில் 22.95 மில்லியன் டன் அளவிலான பருப்பு வகைகளை உற்பத்தி செய்திருந்தது. 2017-18ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மீத்தைல் புரோமைடு பயன்படுத்தப்பட்ட பருப்பு இறக்குமதி செய்வது தொடர்பான சர்ச்சை, உள்நாட்டில் பருப்பு விலை வீழ்ச்சி இதுபோன்ற காரணங்களால் பருப்பு இறக்குமதிக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் பருப்பு இறக்குமதி மெதுவாகக் குறைந்துவருகிறது.

2017-18ஆம் ஆண்டில் பருப்பு இறக்குமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் 6.6 மில்லியன் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் வர்த்தக நெருக்கடியே பருப்பு இறக்குமதி சரிவடைவதற்கான காரணமாக உள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான காரிஃப் பருவத்தில் உரிய வருவாயின்றி பருப்பு விவசாயிகள், தங்களது உற்பத்திப் பொருள்களை சாலைகளில் கொட்டி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நடப்பு ராபி பருவத்திலும் பருப்பு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க பருப்பு இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டும், கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு இறக்குமதியை அதிகரித்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 7 ஜன 2018