மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

நான் ஜீனியஸ்!

நான் ஜீனியஸ்!

தான் ஒரு நிலையான ஜீனியஸ் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (ஜனவரி 6) கூறியுள்ளார்.

முதன்முதலாக வடகொரியப் பத்திரிகை, ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை நம்பினால் அமெரிக்கா வளர்ச்சிப் பாதையில் பயணிக்காது. அழிவையே சந்திக்கும்’ என்று கூறியிருந்தது.

சமீபத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர் மிச்சேல் உல்ப், அதிபர் ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள் கோபக்கனல்’ என்ற அந்தப் புத்தகத்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பல்வேறு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப் இது முற்றிலும் பொய்யானது என்று மறுத்துவந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாம்ஷேல் என்பவர் அதிபர் ட்ரம்ப் பற்றி எழுதிய ‘அவருடைய மனநலத்தில் சந்தேகம்’ என்ற புத்தகம் வெளியானது. இந்தப் புத்தகம் அமெரிக்க அதிபரை மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சித்திரித்துள்ளது.

இந்த நிலையில் இதுபற்றி நேற்று (ஜனவரி 6) கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், “நான் புத்திசாலி மட்டுமல்ல; நிலையான ஜீனியஸ்” என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 7 ஜன 2018