மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தமிழக அரசுக்கு விஜயகாந்த் நன்றி!

தமிழக அரசுக்கு விஜயகாந்த் நன்றி!

‘கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வரும் 12ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தேமுதிகவும் இதுகுறித்த போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதையடுத்து தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கரும்பு ஆலைகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 4ஆம் தேதி கடலூரில் மீண்டும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (ஜனவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது” என்று சுட்டிக் கட்டினார் விஜயகாந்த்.

மேலும், “அதன் எதிரொலியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.1,600 கோடியை ஜனவரி 12ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018