பின்தொடரும் பெட்டி!

சீனாவைச் சேர்ந்த 90 Fun என்ற நிறுவனம் பயனர்களைப் பின்தொடரும் புதிய பெட்டியை (suitcase) வடிவமைத்துள்ளது.
90 Fun Puppy 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய பெட்டி பயனர்கள் செல்லும் இடத்துக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 90 Fun நிறுவனம் கண்டறிந்துள்ள இந்தப் புதிய தொழில்நுட்பப் பெட்டி ஒரு நாய்க்குட்டியைப் போல் செயல்படுவதால் இந்தப் பெயரை வைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தானாக சமநிலை பெற்று சரியாக நிற்கும் திறனுடைய இந்தப் பெட்டியை பயனர்கள் ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தலாம்.