மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரிக்கை!

ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரிக்கை!

தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கான புதிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டுமென அசாம் மற்றும் மேற்கு வங்க தேயிலை தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் தேயிலை உற்பத்தியும் விலையும் மந்தமாகவே இருந்தது. தேயிலை விவசாயிகளுக்கு 2017ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது என்று கூறிவிட இயலாது. தேயிலை உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், விலை உயரவில்லை. இதனால் தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது தொடர்பான சிக்கல் எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

2017ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் தேயிலை உற்பத்தி 1.4 சதவிகிதம் அதிகரித்து 1,285 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது. தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.132ஆக இருந்தது. இதன் விலையில் 2016ஆம் ஆண்டிலும் பெரிய மாற்றமில்லை. மேற்கு வங்கம் மற்றும் அசாமைப் பொறுத்தவரையில் தற்போது குறைந்தபட்ச ஊதியம் (அனுபவம் குறைந்த) தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.213 முதல் ரூ.240 வரை உள்ளது.

கடந்த மாதத்தில் மேற்கு வங்க அரசு தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு 13.6 சதவிகிதம் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த ஊதிய உயர்வைத் தோட்டக்காரர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், யூனியன்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (ஜனவரி 4) நடந்து முடிந்துள்ளது. அசாமில் 2016ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியில் அசாம் 50 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது.

நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச ஊதிய முறைக்கான காலக்கெடு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் புதிய ஊதிய முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று தேயிலை தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜலிங்கில் தனி மாநிலக் கோரிக்கை போராட்டங்களால் 2017ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 2 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018