மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

செங்கோட்டையனை வளைக்கும் தினகரன்

செங்கோட்டையனை வளைக்கும் தினகரன்

‘செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவது உண்மையாகவே வருத்தமாக உள்ளது. அவரை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை’ என்று சட்டமன்ற உறுப்பினர் தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாளை சட்டமன்றம் கூடவுள்ளநிலையில், சட்டப்பேரவை அவை முன்னவர் பதவியிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சி மன்றக்குழுவிலும் சேர்க்கப்படாமல் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டார். தற்போது அவை முன்னவர் பதவியும் பறிக்கப்பட்டதால் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் நேற்று முன்தினம் இரவு மதுரை வழியே தூத்துக்குடிக்குச் சென்றார். மாவட்டத்தில் தனது ஆதரவாளர் இல்ல புதுநன்மை விழா உட்பட பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு, புறப்படுவதற்குமுன் தான் தங்கியிருந்த ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன்.

“உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வைத்துக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்வது, அவர்களை வேலையை விட்டு நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தொழிலாளர்களின் போராட்டம் அதிகரிக்கவே செய்யும்” என்றார் தினகரன்.

அப்போது பன்னீர்செல்வத்துக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்விக்குத் தினகரன் மனம்திறந்து பதிலளித்தார்.

“பாவம் செங்கோட்டையன்... 77லிருந்து எம்.எல்.ஏவாக இருக்கிறார். சீனியர் அமைச்சரான அவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மாவட்டச் செயலாளராக இருக்கிறார். செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்தபோது எடப்பாடி எம்.எல்.ஏவாகக்கூட இல்லை. பன்னீர்செல்வம் அப்போது கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தார் என்றுகூட தெரியவில்லை. பதவி இருந்தாலும் இல்லையென்றாலும் கட்சியின் சின்சியராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் எங்கள் பக்கம் வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறவில்லை. சில காலம் ஒதுக்கிவைக்கப்பட்ட போதும்கூட கட்சியில் தீவிரமாக இருந்தவர். அவருக்காக நான் உண்மையாகவே வருத்தப்படுகிறேன்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018