மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சரிவிலிருந்து மீட்ட பாண்டியா

சரிவிலிருந்து மீட்ட பாண்டியா

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 65 ரன்களைச் சேர்த்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 77 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆட்டம் இந்தியாவின் கையிலிருந்து நழுவுகிறது என்றே சொல்ல வேண்டும்.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. கேப்டவுன் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 5) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புவனேஸ்வர் குமார் சிறப்பாகப் பந்து வீசி தொடக்க வீரர்கள் மூவரையும் ஆட்டமிழக்கச் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி குறைந்த ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாக முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் (1) மற்றும் ஷிகர் தவன் (16) குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணியின் புதிய திராவிட் என ரசிகர்கள் கொண்டாடும் சித்தேஷ்வர் புஜாரா மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் சிறப்பான தொடக்கத்தைத் தர முயற்சித்தனர். ஆனால், அவர்களின் முயற்சி வீணானது. நிதானமாக விளையாடிய இருவரும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 76 ரன்களுக்கு 5 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தவித்துவந்தது. எனவே, பொறுமையாக விளையாடி விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். ஆனால், நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறியதால் அவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் விருத்திமான் சாஹாவும் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் சரிந்துவந்ததால் இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது. அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் இருவரும் சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அவர்கள் ஜோடி மொத்தமாக 99 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனவே, அதன் பின்னர் ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட பாண்டியா அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர் 95 பந்துகளில் 93 ரன்களைச் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அதன் பின்னர் களமிறங்கிய முகம்மது ஷமி, ஜஸ்ப்ரீத் பூம்ரா இருவரும் நிதானமாக விளையாட முயற்சித்தனர். ஆனால், பூம்ரா 2 ரன்கள் சேர்த்த நிலையில் ராபடா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஐடன் மார்க்கம் (34), டீன் எல்கர் (25) இருவரும் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 65 ரன்களைச் சேர்த்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 7 ஜன 2018