மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

உடல் எடை அதிகரித்திருப்பது பெரிய குற்றமாகப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது இன்றைய சமூகம். எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம், நம் மொபைல் போன்தான் என்று நமக்கு அனைவருக்கும் தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளுவதில்லை.

இரவில் விழித்திருந்து டிவி பார்த்துவிட்டு, காலையில் 7 மணிக்குப் பின்பு எழுவது வழக்கமாகி விட்டது. இதனால் தூங்கும் நேரம் குறைகிறது. இரவு 11 மணியில் இருந்து 12 மணி வரை செரிமானத்துக்கான நேரம். நள்ளிரவு 12 - 2 மணி ஈரல் சுத்திகரிப்பதற்கான வேளை. அதன்பிறகு 2 மணி முதல் 4 மணி வரை மூளை புத்துணர்ச்சி பெறும். அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இதயம் ஓய்வெடுப்பதற்கான நேரம். இந்த நேரத்தில் ஓய்வைத் தவிர்ப்பதனால் உடல் பருமன் அதிகமாகும்.

நேரம் தவறிய உணவு முறை

முன்பெல்லாம், காலையில் 8 மணிக்கெல்லாம் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். மதிய உணவை 2 மணிக்குள் முடித்துக்கொள்வார்கள். இரவு உணவை 8 மணிக்குமேல் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நேரத்துக்குச் சாப்பிட வேண்டுமென்ற உணர்வு, நமது கலாசாரத்தில் கலந்திருந்தது. அந்தப் பழக்கம் கைவிடப்பட்டபோது, நமது உடல்பருமனும் அதிகமாகிவிட்டது.

இன்றைய இளைஞர்கள் காலையும் மதியமும் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. இதற்கெல்லாம் சேர்த்து, இரவில் ‘உண்டு’ களிக்கிறார்கள். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்கிறது. சில மாதங்களிலேயே, அவர்களது உடல் எடை 10 முதல் 12 கிலோ வரை அதிகரிக்கிறது.

பாலில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதற்குப் பதிலாக, தேனை உபயோகப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதிப்பு உண்டாகாது. குளுக்கோஸ், ப்ரக்டோஸ், சுக்ரோஸ் (glucose, fructose, sucrose) என்று மூன்று வகை சர்க்கரை உண்டு. இவற்றில் குளுக்கோஸும் ப்ரக்டோஸும் உடலில் நேரடியாகச் சர்க்கரையாக மாறும். சுக்ரோஸ் சாப்பிடும்போது இனிப்பாக இருந்தாலும், அது சர்க்கரையாக மாறாது. இந்த சுக்ரோஸ் தேனில் அதிகமாக இருக்கிறது. தேனில் பலகாரம் செய்து சாப்பிட்டாலும்கூட, சர்க்கரை நோயாளிகளின் உடலில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகமாகாது.

குழந்தைகளுக்குத் தினமும் பாலில் தேன் கொடுத்துவந்தால், உள்நாக்கு வளர்ச்சி இருக்காது. டான்ஸிலைட்டிஸ் (tonsillitis), லேரன்சைட்டிஸ் (laryngitis) சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் இருக்காது. பெரியவர்கள் இதைச் செய்தால், அவர்களது கொழுப்பு அளவு குறைவதைப் பார்க்கலாம். கிரீன் டீயுடன் தேன் கலந்து சாப்பிடுவதால், மூளை புத்துணர்ச்சி அடையும். உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018