மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பட்ஜெட்!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பட்ஜெட்!

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிக்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அமைச்சரவை பிப்ரவரி 1ஆம் தேதியைப் பரிந்துரைத்துள்ளது. மேலும், வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைக்கான வரியைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் சுமார் 250 மில்லியன் நடுத்தர குடும்பங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் ஊதியம் அதிகரித்துவருவதோடு வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை வளர்ந்துவருகிறது.

குறிப்பாக செப்டம்பர் மாதத்தோடு முடிந்த 2017-18ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சுற்றுலாத் துறை 10 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 8 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. தற்போது இந்தியாவில் சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளில் 40 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் 10 மில்லியன் பேர் இத்துறை சார்ந்த பணிகளில் கூடுதலாக ஈடுபடுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வரியைக் குறைத்து, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018