மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

நாளொன்றுக்கு 100 விமான சேவைகள் ரத்து!

நாளொன்றுக்கு 100 விமான சேவைகள் ரத்து!

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டத்தின்போது விமான சேவை பாதிக்கப்படும். அதாவது, விமான சேவை நேரம் மாற்றியமைக்கப்படுமே தவிர, ரத்து செய்யப்பட மாட்டாது. ஆனால், இந்தாண்டு ஜனவரி 26ஆம் தேதியை முன்னிட்டு பாதுகாப்பு கருதி ஒன்பது நாள்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படும் என விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

குடியரசு தின ஒத்திகை மற்றும் பாதுகாப்பு கருதி ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை காலை 10.30 மணியிலிருந்து 12.15 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும். நாளொன்றுக்கு 100 விமானங்கள் ரத்து செய்யப்படும். இதனால், 15,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என டெல்லி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 100 விமானங்களின் சேவையை ரத்து செய்வது இதுவே முதன்முறையாகும். சர்வதேச விமான நிலையங்கள் விமான சேவையை மறுசீரமைக்க வேண்டும். டெல்லி விமான நிலையத்துக்கு 1,350 விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், ஒவ்வோர் ஆண்டும் விமானங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 வரை அதிகரிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018