மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தமிழக அரசு திவால் ஆகிவிட்டது!

தமிழக அரசு திவால் ஆகிவிட்டது!

தமிழ்நாட்டில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று (ஜனவரி 7) நான்காவது நாளாகத் தொடர்கிறது. நீதிமன்றத்துக்கும், தொழிலாளர்கள் சங்கங்களுக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. தமிழக அரசோ போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணப் பலன் கோரிக்கைகளுக்கு எவ்வித உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

‘இந்த நிலைக்குக் காரணம் தமிழக அரசு திவால் ஆகிவிட்டதுதான்’ என்று குற்றம்சாட்டுகிறார் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மூன்று நாள்களாகத் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வழியாகப் பேச்சு நடத்தி இணக்கமான முடிவை உண்டாக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே குறைவான வேறுபாடே உள்ளது. ஆனால், தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தில் பிடித்த ஏழாயிரம் கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி, அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) முதலியவற்றுக்குக் கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. கடந்த 16 மாதங்களில் 21 தடவை நடந்த பேச்சில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. காரணம், தமிழக அரசிடம் அவ்வளவு நிதி இல்லை. தமிழ்நாடு அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார் பெ.மணியரசன்.

“எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உருப்படியற்ற வாண வேடிக்கைச் செலவுகளை பல நூறு கோடி ரூபாய்க்குச் செய்துள்ள எடப்பாடி அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது” என்றும் குற்றம்சாட்டுகிறார் மணியரசன்.

“போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ள தங்களது ஊதியப்பணம் ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 16 மாதங்களாகக் குரலெழுப்பி வருகிறார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை; இன்றியமையா தேவைகளுக்குத் தங்கள் வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்கும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால்தான் அவர்கள் போராடுகிறார்கள்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018