மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ஐஸ்வர்யா சம்பளம்: திகைக்கும் பாலிவுட்!

ஐஸ்வர்யா சம்பளம்: திகைக்கும் பாலிவுட்!

இந்தியத் திரையுலகில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் 1967ஆம் ஆண்டு வெளியான ‘ராட் அர் டின்’ படத்தின் ரீமேக்குக்காக அவர் வாங்கவுள்ள சம்பளத்தைக் கேட்டு பாலிவுட் திரையுலகமே திகைத்துப்போயுள்ளது.

கதாநாயகர்களை ஒப்பிடுகையில் கதாநாயகிகளுக்குச் சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படுவது கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் வழக்கமாக இருக்கிறது. அதுவும் திருமணமான நடிகைக்கு இன்னும் குறைவாகவே வழங்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் அதிக அளவில் படங்களில் ஒப்பந்தமாகாவிடினும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவருக்குத் தொடர்ந்து அமைந்துவருகின்றன. ஃபன்னி கான் படத்துக்குப் பின் அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘ராட் அர் டின்’. 1967ஆம் ஆண்டு சட்யன் போஸ் இயக்கத்தில் பிரதீப் குமார், நர்கீஸ் நடிப்பில் வெளியாகிய இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஐஸ்வர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் அவர் இந்தப் படத்துக்காக வாங்கவுள்ள சம்பளம் பத்துக் கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகப் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் மிட்-டேவுக்கு அளித்த பேட்டியில், “ஐஸ்வர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதால் அதிக முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியுள்ளது. இரு மடங்கு வேலை இருக்கும். அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. மற்ற படங்களில் ஒப்பந்தமாக முடியாது. எனவே, இந்தத் தொகையைக் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பும் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளனர்.

“இந்தப் படத்தின் பணிகளை விரைவில் அவர் மேற்கொள்ளவுள்ளார். தயாரிப்பாளர் ப்ரெர்னா அரோரா இதற்குச் சம்மதம் தெரிவித்தாலும் சினிமா வர்த்தகர்கள் திருமணமான 44 வயது நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சியில் உள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018