மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

இதென்ன திமுக ஆட்சியா? - அமைச்சர் கோபம்!

இதென்ன திமுக ஆட்சியா? - அமைச்சர் கோபம்!

அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரைத் தாக்க முயற்சித்த தொழிற்சங்கத்தினரை கைது செய்யாதது ஏன் என்று காவல் துறையினரிடம் அமைச்சர் வீரமணி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தமிழகம் முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்குப் பதிலாக தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. போக்குவரத்து பல இடங்களில் முடங்கிய நிலையில் 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஊடகங்களில் பேட்டியளித்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளை இயக்க முயன்ற ஓட்டுநர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (ஜனவரி 6) வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஒருவரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் சக ஊழியர்கள் பேருந்தில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து பணிமனைக்கு வந்திருந்த தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, “கண்ணெதிரே ஓட்டுநர் தாக்கப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசு பேருந்துகளை இயக்கவிடாமல் அடிக்கிறார்கள். அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எத்தனை நபர்களை கைது செய்திருக்கிறீர்கள்? 1 சதவீதம் இருக்குமா? என்னா கவர்ன்மென்ட் நடக்குது இங்கே? திமுக ஆட்சி நடக்குதுன்னு நினைச்சீங்களா?” என்று திருப்பத்தூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், கந்திலி பகுதி காவல் துறை ஆய்வாளர் பழனி ஆகியோரை அமைச்சர் கடுமையாகக் கண்டித்தார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 ஜன 2018