மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

உயர் கல்வியில் சேர்பவர்கள்: தமிழகம் முதலிடம்!

உயர் கல்வியில் சேர்பவர்கள்: தமிழகம் முதலிடம்!

உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்திய அளவில், 2016 - 2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த 18 -23 வயது மாணவர்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று முன்தினம் (ஜனவரி 5) வெளியிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாடு முழுவதும் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம் 46.9% முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்வதில் 45.6% பெண்களும் 48.2% ஆண்களும் உள்ளனர். உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பட்டியலில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. நாட்டின் சராசரி அளவு 35.7% உள்ள நிலையில் பீகார் 14.4%, அசாம் 17.2%, ஒடிசா 18.5%, மேற்குவங்கம் 21% பெற்று கடைசி இடங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 24.9% உள்ளது. இந்தப் பட்டியலில் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை 56.1% பெற்று சண்டிகர் முதலிடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் ஒன்பது லட்சம் மாணவர்களில், எட்டு லட்சம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். அதில் 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கின்றனர். 3 லட்சம் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம் மற்றும் பிற படிப்புகளில் சேர்கின்றனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 7 ஜன 2018