மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

பஸ் ஓட்டாம போராட்டம் பண்ணுறதுக்குப் பதிலா, பஸ் ஓட்டிட்டே ஏதாவது நூதன போராட்டம் பண்ணலாம்ல. கோரிக்கை நிறைவேறும்வரை பயணிகளிடம் டிக்கெட் காசு வாங்குவதில்லைனு முடிவெடுத்து ஓட்டினா, மக்கள் ஆதரவும் கிடைக்கும். நானும் ஒரு சின்ன வேலையா கும்பகோணம் வரைக்கும் போய்ட்டு வந்திருவேன்.

கடிதம் ஒண்ணு கிரியேட் பண்ணியிருக்காங்க நம்ம வாட்ஸப் ஓட்டுநர்கள். நிஜமாவே ஓட்டுநரின் உண்மைக் கடிதாமாங்கிறது தெரியல.

அரசு பேருந்து ஓட்டுநரின் கடிதம்

அறிவுகெட்ட அரசின் அமைச்சர்களை சென்றடையுமா?

படித்து பகிர்வோம்...

ஐயா, திரு.விஜயபாஸ்கர், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களே...

நான் கடந்த 35 வருடங்களாகப் போக்குவரத்துத் துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாள்கள் இந்த இன்ஜின் வேலை செய்தது. இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன்.

ஒருநாள் பணியில் இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக்கொண்டு வண்டியைக் கட்டுபாட்டில் வைத்து ஓரம்கட்டினேன்.

உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடுதான் என் பணியைச் செய்தேன். இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது, என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எஃப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும்தான். நான் ஓய்வுபெற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை ஒரு ரூபாய்கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.

அந்தப் பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடங்களாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தைப் பெற போராடி கொண்டிருக்கின்றனர்.

மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தைப் பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள். அதன்பிறகு கோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.

முன்பு மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று அடுத்த வேளை உணவைப் பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.

நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்ல நாள்கூட பிள்ளைகளோடு இல்லாமல்.

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வுபெற்ற பின் வழங்குகிறோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்?

நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்குப் பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும்தான் உங்களுக்கு கிடைத்ததா? உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா?

தயவுசெய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்னையைத் தீர்த்து வையுங்கள்...

இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்னு கடைசியில கேப்ஷன் வேற... அங்கேதான்ய்யா நம்பலாமா... கூடாதான்னு தெரியல.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018