மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தெலுங்கில் அறிமுகமாகும் செல்வராகவன் உதவியாளர்!

தெலுங்கில் அறிமுகமாகும் செல்வராகவன் உதவியாளர்!

செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீரஞ்சனி தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரங்குலா ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராஜ் தருண், சித்ரா சுகுலா, சித்ரா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். “தாய், மகன், அவரது காதலி பற்றிய உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது. நட்பு, பாசம், காதல், அண்ணன் - தங்கை சென்டிமென்ட் என நிறைந்திருக்கும்” என ஸ்ரீரஞ்சனி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியிலிருந்து ஒன்பது ஆண்டுகள் அவரிடம் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீரஞ்சனிக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக இந்தப் படத்தின் ட்ரெய்லரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “தமிழில் தான் முதலில் படம் இயக்க முயற்சித்தேன். ஆனால், அது கை கூடவில்லை. ஒளிப்பதிவாளர் மதி சார் கதையைக் கேட்டு தெலுங்கில் இயக்கலாம் என கூறினார். கலை இயக்குநர் ராஜீவன் சார் நாகார்ஜுனா புரொடக்ஷன் ஹவுஸுக்கு அழைத்து சென்றார். அவர்களுக்குக் கதை பிடித்துப்போக தெலுங்கில் இயக்க சம்மதித்தனர்” என்று கூறும் ஸ்ரீரஞ்சனி தமிழில் இந்தப் படத்தை இயக்க நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“தெலுங்கில் எப்படி போகிறது என்பதை பார்த்து தமிழில் ரீமேக் செய்ய வேண்டும். தெலுங்கில் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 ஜன 2018