மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: மிளகு - வெற்றிலை தோசை!

கிச்சன் கீர்த்தனா: மிளகு - வெற்றிலை தோசை!

தேவையான பொருள்கள்:

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

வெற்றிலை - 6

தோசை மாவு - 5 கப்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெற்றிலைகளை நன்கு சுத்தம்செய்து காம்புகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கையால் நன்றாக பிசைந்து தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஊற்றி பிறகு தோசையைச் சுற்றி சிறிதளவு எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.

சூடான வெற்றிலை மிளகு தோசை தயார். இதை அனைத்துவிதமான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தோசை.

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்:

புரதம், கொழுப்பு, தாது பொருள்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து காணப்படுகிறது. மேலும் கால்சியம், கரோடின், நியாசின் மற்றும் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் ஆகியவை உள்ளன.

இது ஜீரணத்துக்கு மிகவும் உதவுகிறது. வாய்வு தொல்லையைக் குறைக்கும். விஷக்கடிக்கு உதவுகிறது.

சிறுநீர் பிரச்னை, அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். கண்வலி, வயிற்றுவலி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.

ஞாயிற்றுகிழமைகளில் இதுபோன்ற வித்தியாசமான மெனுக்களைச் செய்து தர அனைவரும் விரும்பி சாப்பிடுவர். முயன்று பாருங்களேன்

கீர்த்தனா சிந்தனைகள்:

மனைவி: சென்னைல பஸ் ஸ்ட்ரைக்குங்க நான் அம்மா விட்ல தங்கிட்டு வரேன்னு போன் பண்ணுச்சு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018