மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால், சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டுவருவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதல் போன்றவை இணையதள சேவை மையங்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புகை வழங்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதளச் சேவைக்கு ‘மோடமும்’ வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை இதற்கான இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதனால் தங்களது சொந்தச் செலவில் அரசுப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், இணையதளக் கட்டணத்துக்காகச் செலவிடப்படும் பணத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த 2017 டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து 22 நாள்களாக தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்திருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

“டிசம்பர் 29ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018