மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சென்னையின் வெற்றி தொடருமா?

சென்னையின் வெற்றி தொடருமா?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (ஜனவரி 7) சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி., டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். தற்போது வரை அனைத்து அணிகளும் பாதி லீக் ஆட்டங்களை விளையாடிவிட்டன.

அதில் 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை புனே மற்றும் சென்னை அணிகள் பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக 15 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும், 14 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காவது இடத்திலும் உள்ளன. லீக் போட்டிகள் முடிவடையும்போது இந்தப் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது.

சென்னை அணியைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய மூன்று சீசனில் இரண்டு முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஒருமுறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு சென்னை அணி அரையிறுதி வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், இந்த சீசனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி அணியுடன், சென்னை அணி விளையாட உள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018