மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

அதிமுகவின் கடைசி அத்தியாயம்!

அதிமுகவின்  கடைசி அத்தியாயம்!

அதிமுக தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

சமீபகாலமாகவே மத்திய பாஜக அரசிற்கும் தமிழக அரசுக்குமான உறவு சுமுகமாக இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டுவருகிறது. "பெயரளவில்தான் மத்திய அரசு சமத்துவத்தைப் பேசுகிறது. தமிழர்களின் உரிமைகளை அது பறிக்கிறது” என்ற விமர்சனத்தை வெளிப்படையாகவே மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வைத்திருந்தார்.

இந்நிலையில் வேலூரில் இன்று (ஜனவரி 6) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று நான் கூறுகிறேன். திராவிட முன்னேற்ற கழகமும் அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

ரஜினிகாந்த் அவர்களின் வருகை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக மக்கள் நினைக்கலாம். பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் கட்சியை வலுப்படுத்தித் தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவாவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 6 ஜன 2018