மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

கண்ணைக் கவரும் அழகில் பிறரைக் கவர்வதில் முக்கியமானது ஆடை. எத்தனை வகை ஆடைகள் வந்துவிட்டாலும் அனைத்துக்கும் ஏற்றதாக இருப்பது ஜீன்ஸ்தான். ஆண் பெண் என இருபாலரும் அதிகளவில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஜீன்ஸ்களில் ஏகப்பட்ட டிசைன்களும் வகைகளும் நாளுக்குநாள் வந்துகொண்டே இருக்கின்றன

கேஷ்வல் மற்றும் பார்ட்டிகளுக்கான ஆடை என்று கருதப்பட்ட ஜீன்ஸ் பேண்ட், தற்போது பிசினஸ் கேஷ்வல் என்று வந்துவிட்டதால் அலுவலகம் செல்லும்போதும் ஒரு சில நாள்கள் அணிந்துசெல்கின்றனர். இதன் காரணமாக மாறுபட்ட வண்ணச் சாயல் மற்றும் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜீன்ஸ் வர, உபயோகமும் மாறுபடுகின்றன. ஜீன்ஸ் தயாரிப்பவர்களும் சில மாற்றங்களுடன் புதிய புதிய பேண்ட், வடிவமைப்பு மற்றும் வண்ணங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

பாரம்பர்ய அடர்நீல ஜீன்ஸ், வெளிர்நீல நிற ஜீன்ஸ், ரிப்படு ஜீன்ஸ், வெள்ளை ஜீன்ஸ், கறுப்பு ஜீன்ஸ், கிரீஸ் லைன் ஜீன்ஸ், ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ், ஜாக்கர் ஜீன்ஸ் என்றவாறு பல வகைகள் உள்ளன. அவற்றில் நமது தேவையை எது பூர்த்தி செய்கிறது என்பதுடன், எது காலத்துக்கேற்ப ஒத்துபோகிறது என்பதும் அறிவது அவசியம்.

பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற கறுப்பு ஜீன்ஸ்:

முற்றிலும் கறுப்பு நிற ஜீன்ஸ்கள் ஸ்மார்ட்டான தோற்றப் பொலிவைத் தருகின்றன. எப்போது இதை அணிந்தாலும் பார்ட்டி லுக் தருவதுடன் கமபீரத்தையும் தருகிறது. கறுப்பு நிற ஜீன்ஸில் மங்கலான தோற்றம் மற்றும் வெளுக்கப்பட்டது போன்றவை நன்றாக இருக்காது. எனவே, முழுக்க முழுக்க கறுப்பாக உள்ளதே சிறப்பானது.

ஜாக்கர் ஜீன்ஸ்:

ஸ்டைலான இளைஞர்கள் அணிகின்றவாறு கணுக்கால் பகுதியில் இறுக்கிப் பிடிக்கும் எலாஸ்டிக் அமைப்புடன் உள்ளது. ரிப்படு, வாஷ்டு, டிஸ்டிரஸ்டு என அனைத்து வகையிலும் ஜாக்கர் ஜீன்ஸ் கிடைக்கின்றன.

ஜீன்ஸ் அணிவதால் சில பிரச்னைகள் இருந்தாலும், ஃபேஷன், செளகர்யம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவுக்கு ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

`ஸ்கின் பிட்’ ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவற்றை வாங்க வேண்டும். ‘ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்’ என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணிய வேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் ஃபேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018