மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

விஜய் சேதுபதியை வீழ்த்திய சூர்யா அணி!

விஜய் சேதுபதியை வீழ்த்திய சூர்யா அணி!

மலேசியாவில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா அணியுடன் மோதிய விஜய் சேதுபதி அணி தோல்வியைத் தழுவியது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக ரஜினி, கமல் உட்பட நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியாவுக்கு நட்சத்திர விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர். விஜய், அஜித் இந்நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை. மலேசியாவில் கலைஞர்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கலைநிகழ்ச்சிகள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது நடிகர்கள் பங்கு பெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சேலம் சீட்டாஸ், மதுரை காளைஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரைனோஸ், சென்னை சிங்கம்ஸ், கோவை கிங்ஸ், பெனாங் பஞ்சர்ஸ் மற்றும் செலாங்கோர் ஜெயிண்ட்ஸ் ஆகிய எட்டு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கின்றன.

இந்த எட்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில், திருச்சியைச் சொந்த மாவட்டமாகக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி மற்றும் விஷால் தலைமையில் மதுரை காளைஸ் ஆகியவை போட்டியிட்டன. ஆறு ஓவர் போட்டியாக நடைபெற்ற இதில் சிவகார்த்திகேயன் அணி, விஷால் அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 6 ஜன 2018