மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ரஜினி மன்றம்: அடுத்த நடவடிக்கை!

ரஜினி மன்றம்: அடுத்த நடவடிக்கை!

ரஜினி ஆதரவாளர் அல்லது ரசிகர் என்ற பெயரில் ஊடக விவாதங்களில் பங்கெடுப்பவர்கள் கூறுவது அவர்களது சொந்தக் கருத்துக்களே என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். முதலில் ரஜினி மன்றம் என்ற செயலியையும், இணையப் பக்கத்தையும் ஆரம்பித்த ரஜினிகாந்த், அடுத்து ரசிகர் மன்றம் என்ற பெயரை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றம் செய்தார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள வேளையில், ரஜினியின் ஆதரவாளர் மற்றும் ரசிகர் என்ற பெயரில் சிலர் ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்துவந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று (ஜனவரி 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபகாலமாக ரஜினியின் ஆதரவாளர் அல்லது ரசிகர் என்ற பெயரில் சிலர் ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தங்களது சொந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் கூறியதுபோல், மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல் கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்கச் செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டுக்கொண்டிருகிறோம். எனவே மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை. விவாதங்களில் பங்கெடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் ஊடக விவாதத்தில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018