மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை!

லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை!

தியோஹர் கருவூலத்தில் பண மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித்தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் மீது, தியோஹர் மாவட்ட கருவூலத்தில் 1991-96 காலகட்டத்தில் 89.27 லட்சம் பண மோசடி செய்ததாக கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லாலு உட்பட 16 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது தண்டனை விவரம் ஜனவரி 3ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று அறிவித்தார் நீதிபதி சிவபால்சிங்.

ஆனால், அறிவிக்கப்பட்டவாறு ஜனவரி 3 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியாகவில்லை. அதற்கடுத்த நாளும் இந்த நிலையே தொடர்ந்தது. லாலுவின் கட்சியினர் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 6) மாலை 4 மணிக்கு தண்டனை விவரத்தை வெளியிட்டார் நீதிபதி சிவபால்சிங். இதில், லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம் என்றும், மேல்முறையீட்டுக்காக உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் தண்டனைக்குள்ளான யாரும் இதுவரை ஜாமீன் பெற முயற்சிக்கவில்லை. இதனால், அனைவரும் விரைவில் உயர் நீதிமன்றத்தை நாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 6 ஜன 2018