மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

டெங்கு பாதிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

டெங்கு பாதிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

"தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 15,589 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இவர்களில் 46 பேர் இறந்துள்ளனர்" எனத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் டெங்கு பாதிப்பு குறித்து தமிழக அரசு தெரிவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இதுவரை டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கடந்த 2016இல் டெங்குக்கு 2,531 பேரும், சிக்குன்குனியாவுக்கு 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை டெங்குவுக்கு 16,301 பேரும், சிக்குன் குனியாவுக்கு 96 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்குக்கு 2016இல் 5 பேரும், கடந்த ஆண்டில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் சிக்குன் குனியாவால் உயிரிழப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் 30ஆம் தேதிக்கு பிந்தைய டெங்கு பாதிப்பு விவரங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று(ஜனவரி 5) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 2,687 பேரும், அக்டோபரில் 6,124 பேரும், நவம்பரில் 4,834 பேரும், டிசம்பர் மாதத்தில் 1,944 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018