மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கடிக்க கறி இல்லையா? :அப்டேட் குமாரு

கடிக்க கறி இல்லையா? :அப்டேட் குமாரு

போன வருசம் இந்நேரம் ஜல்லிகட்டு போராட்டம் ஆரம்பிக்குற நிலைமையில இருந்து அடுத்த பத்து நாள்ல தமிழ்நாடு ஃபுல்லா பத்திகிச்சு. ஸ்டேட்ல இருந்து சென்ட்ரல் வரை ஆட்டம் காண வச்ச போராட்டம் அது. இந்த வருசம் அதுக்குள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமாயிருச்சு. இந்த தடவை பழனிசாமி கவர்மெண்ட் என்ன ஆட்டம் எல்லாம் காணப் போகுதோ? 8ஆம் தேதி சட்டப் பேரவை கூட்டதொடர் கூட போறதுக்கு பரிட்சைக்கு ரெடியாகுற பையன் மாதிரி பதறிப்போயிருக்குற அவருக்கு இப்பவே லேசா ஜுரம் வந்த மாதிரி தான் இருக்கும். லீவுலாம் போட முடியாது சார்ன்னு யாராவது சொல்லுங்கப்பா அவர்ட்ட. இந்த பக்கம் என்னனா ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்துவைக்க மாட்டோம்னு பீட்டா பேச்சை கேட்டு மன்ற நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க. அவங்க தலைவர்ட்ட சொல்லுங்கப்பா நம்மூர்ல பீட்டான்னா சின்ன பசங்க கூட கூப்பிட்டு கலாய்ப்பாங்கன்னு. அவங்க சொன்னாங்கன்னு இவரு நிறுத்திட்டாரா. போன வருசம் சம்பவம் எதுவும் அவருக்கு தெரியாதா? பிரியாணி இல்லாம கூட்டம் சேராதுங்குற அடிப்படை அரசியல் தெளிவு இல்லையான்னு நெட்டிசன்ஸ் ரவுண்டு கட்டுறாங்க. வெள்ளிந்தியா இருக்காரேப்பா..

@Kadharb

"விஜயகாந்தும் இதே போல்தான் கட்சி துவங்குமுன் கலைஞரிடம் ஆசி வாங்கினார்" - ​ஸ்டாலின்​

இன்னைக்குத் தான் கலைஞரோட நையாண்டியை ஸ்டாலினிடம் பார்க்கிறேன்

@Tamil_Zhinii

30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் ரஜினி - ஜி. கே. வாசன்

உங்கள மாதிரியே இருக்குற இடம் தெரியாமையா...?!

@manipmp

பேச்சிலர்களின் பீரோ என்பது கொடிக் கயிறே!

@Kayal_Twitz

ரஜினி எம்.எல்.ஏ ஆகலாம் முதல்வர் ஆககூடாது - சிமான் #

அது சரிணே ...நீ எப்பணே எம்.எல்.ஏ ஆவ?

@udaya_Jisnu

அருணாச்சலம் படத்துல, பணத்த தீக்குறதுக்காக ரம்பாவுக்கு சம்பளம் கொடுக்கிற மாதிரிதான்,

1GB நெட்ட தீக்கனுமேனு,

கடைசி நேரத்துல யூடியூப் வீடியோவெல்லாம் பாக்க வேண்டியிருக்கு...

@Aruns212

வி.ஐ.பி 2 படத்தில் வரும் தனுஷின் பைக் வேகத்தில் வந்து, கஜோலின் கார் வேகத்தில் சென்று விட்டால்,அதற்கு மாதச் சம்பளம் என்று பெயர்.

@mrpaluvets

பீட்டாவின் வேண்டுகோளுக்கு இணங்கி மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த மதுரை ரஜினி ரசிகர் மன்றம்,விருந்தை நிறுதிவிட்டதாக அறிவித்திருக்கிறது

இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?பீட்டாவிடம் மண்டியிட்ட முதல் ரசிகர் மன்றம் என்ற பெருமை ரஜினி ரசிகர் மன்றத்துக்கு தான் போய் சேரும்!

@devil_girlpriya

ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம்

விஜய்க்கு போட்டியா?

@Kadharb

பஸ் ஓட்டாம போராட்டம் பண்ணுறதுக்கு பதிலா , பஸ் ஓட்டிட்டே ஏதாவது நூதன போராட்டம் பண்ணலாம்ல​

​கோரிக்கை நிறைவேறும்வரை, பயணிகளிடம் டிக்கெட் காசு வாங்குவதில்லைனு முடிவெடுத்து ஓட்டினா, மக்கள் ஆதரவும் கிடைக்கும்​

​நானும் ஒரு சின்ன வேலையா ​மதுரை​ வரைக்கும் போய்ட்டு வந்திருவேன்​

@sheik_twitts

மோடி வந்தா நாட்டை கலர் புல்லா மாத்துவாருன்னு பாத்தா நோட்டை தான் கலர் கலரா மாத்திட்டு இருக்காரு.

@senthilcp

எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜு.

சமூகவலைத்தளங்கள்ல,வெச்சு செஞ்சுட்டிருக்காங்க,தெரியுமா?தெரியாதா?

@BakkarSiddiq

எம்ஜிஆரே பொறந்து வந்து ஆட்சிக்கு வரனும்னு நெனைச்சாலும் இந்த ஜெனரேஷன் வச்சு செய்யும் என்பதே நிதர்சனம்.

பாரபட்சம் பாக்காம எல்லாரையும் கழுவி கழுவி ஊத்துறானுங்க.

@naatupurathan

ஸ்ட்ரைக் செஞ்சி மக்கள கஷ்டபடுத்தறது நியாயமான்ற சில திடீர் சமூக ஆர்வளர்கள பாக்கமுடியுது,

யார்டாதுனா,

ஜல்லிக்கட்டு போராட்டத்தப்ப வாயில்லா ஜீவன துன்புறுத்துறது சரியானும், விவசாயிகள் போராட்டத்தப்ப தொப்பைய பாத்தா கஷ்டபடுறாப்ல தெரியலயேனும் பதிவிட்ட அதே கோஷ்டிதான்!

கொண்டைய மறைங்கப்பா!

@kathir_twits

முதல்வர் எதி்ர்கட்சி தலைவர் தொலைபேசியில் பேசினால் அது தமிழ் நாட்ல breaking news #

இதே கேரளாவில் இது சாதாரண செய்தியா செய்தித்தாளில் வரும் !!

@manipmp

“க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள் கிழிந்துபோன‌

துப்ப‌றியும் ந‌வீன‌த்தை

தெரியாம‌ல் எடுத்துப் ப‌டித்திருக்கிறீர்க‌ளா?

அதுதான் வாழ்க்கை!

-அப்துல் ர‌குமான்

@senthilcp

-நாம் தமிழர் கட்சியில் இருந்து 100 இளைஞர்கள் ரஜினி மன்றத்தில் இணைந்தனர்

-நம்ம கட்சில எத்தனை பேரு இருந்தாங்க?

-அதான் சொன்னேனே"100 பேர்

@AniAnu12

இப்பலாம்

யாரும்

நல்லநேரம்

பார்த்து வெளிய கிளம்புறதுல்ல..

மொபைல் பேட்டரில

புல் சார்ஜ் ஆனபின்னதான் வெளிய வர்றாங்க

-காலகொடுமை..

@CreativeTwitz

வேட்டி தின கொண்டாட வேட்டி கட்டுனவன், டீக்கடைல டீ கொட்டியிருந்தது தெரியாமல் உக்கார்ந்திட்டு, கறையோட போறான்..

இனி அவன் சம்சாரம் துவைதுவைனு துவைக்க போகுது..

ஏரியல்லோ_சர்ப்போ

@CreativeTwitz

ஆடுகளுக்கும் உணர்வு உண்டு; உங்கள் பெயரால் நடைபெறும் கிடா வெட்டைத் தடுங்கள்- ரஜினிக்கு பீட்டா கோரிக்கை

மாட்ட கடிச்சு , நாயை கடிச்சு கடைசில ஆட்டையும் கடிக்க வந்திட்டியா,

இப்ப ரஜினி உங்களை எதிர்த்து அறிக்கை விடுவாறு, அதை நாங்க நம்பனும், அதானே

@HAJAMYDEENNKS

இனி பொங்கல் பண்டிகை வரும்போது ஜல்லிக்கட்டோடு மெரினாவும் நினைவு கூறப்படும்...!

@mekalapugazh

"அவர் கொலை செய்தது கண்டிக்கத்தக்கது.. ஆனாலும் இறந்ததும் இவருடைய தவறுதான்.."

என்பதாகவே..எல்லா விவாதங்களிலும் சுமந்த் சி.ராமன்களின் பேச்சும் இருக்கும்.

@naatupurathan

ரஜினிக்காக நடு ரோட்டில் நிற்பேன் - விஷால்!

இதென்ன பிரமாதம், இன்னும் கொஞ்ச நாள்ல அவரே நடு ரோட்ல தான் நிக்கப்போறாப்ல டூட்...!!!

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018