மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

செந்தில் பாலாஜி - விஜயபாஸ்கர்: அரசியலாகும் போராட்டம்!

செந்தில் பாலாஜி - விஜயபாஸ்கர்: அரசியலாகும் போராட்டம்!

அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தினால் பேருந்தை நம்பியுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேருமென்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கடுமையாக எச்சரித்தது.

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நாங்கள் காரணமல்ல, அரசுதான் காரணம் என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டிவருகின்றன. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்று கடந்த 10 வருடங்களாகக் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் நீதிமன்ற உத்தரவைச் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் இன்று (ஜனவரி 6) கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து, “போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி போக்குவரத்து தொழிலாளர்களின் 1500 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தராததே இதற்குக் காரணம்" என்றும் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தினார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 6 ஜன 2018