மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

இந்தியாவே காரணம்: பாகிஸ்தான் பதில்!

இந்தியாவே காரணம்: பாகிஸ்தான் பதில்!

‘இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது’ என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று (ஜனவரி 5) குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 1ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் இருக்கிறது” என்று பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவிருந்த நிதியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

கடந்த இருதினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தியாகப்போர் புரிந்துவருவதாக சீன அரசு பாகிஸ்தானை புகழ்ந்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்காதிருந்த பாகிஸ்தான் அரசு, அதிபர் ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை விவாதிக்க தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தை நேற்று இஸ்லாமாபாத்தில் கூட்டியது. அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தியதற்கு இந்தியாவே காரணம் என்று இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 6 ஜன 2018